நெல்லை மாவட்டம் நம்பியாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. ஆற்றங்கரை பள்ளிவாசலில் ஒரு விடுதி கட்டுவதற்காக பைக்குகளில் மணல் திருடப்பட்டது. அது தொடர்பாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதும் கூடங்குளம் சரக காவல்துறையினர், மணல் கொள்ளையரிடம் முதலில் ரூ. 50,000, பின்னர் ரூ.2 இலட்சம் என இரு தவணைகளாக கையூட்டு பெற்று வழக்குப் பதியாமல் தவிர்த்துள்ளனர்.
வடுகம்பட்டி நம்பியாற்று அணையின் அருகில் தொடர்ந்து மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. அது குறித்து வள்ளியூர் காவல் துணை கண்காணிப்பாளருக்கு விவசாயி ஒருவர் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். தகவல் தெரிவித்த அவரையே மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதே திசையன்விளை சரகம் இரம்மதபுரம் அருகேயும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுகிறது.
வள்ளியூர் கோட்ட காவல்துறை அதிகாரியின் அசட்டையினாலும், ஊழல் செயல்பாட்டாலும் தொடர்ந்து மணல் திருடப்படுவதாக கூறும் விவசாய சங்கத்தினர், ‘ கொள்ளையர் குறித்து தகவல் தெரிந்தும் காவல்துறை மௌனம் காக்கிறது. இது தொடர்ந்தால் விரைவில் திசையன்விளையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.







