தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 3 ஆண்டுகள் பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கான முழு செலவையும் தாட்கோ ஏற்றுக் கொள்ளும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.