பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்தது. அதில் ஊரடங்கு தளர்வில் பள்ளிகளை திறப்பது, அதற்கான வழிகாட்டுநெறிமுறைகளை வகுப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அதையடுத்து , வரும் செப்டம்பர் 1ஆம்தேதி, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.













