தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது மனைவி, மகன் இல்யாஸ் முகமது மற்றும் மகளுடன் ஏரல் அருகே உள்ள மங்கலக்குறிச்சி தடுப்பணையில் குளிக்க வந்தார். இல்யாஸ் முகமது (19)அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்துசென்ற போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்தவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இல்யாஸ் முகமது தூத்துக்குடி கல்லூரி ஒன்றில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.