தி. நகர் கடையடைப்பு வியாபாரிகள் திடீர் மறியல்

0
525

சென்னையில் ஒரு சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு வரும் 9ஆம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முழு முடக்கம் அறிவித்தது இதில் ஒரு பகுதியான திநகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது

இந்நிலையில் வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து உஸ்மான் சாலையை வழிமறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் டி நகர் காவல்துறையினர் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது

மேலும் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here