மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அரசுசெயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு செயலாளர் டாக்டர். சந்திரமோகன் பேசுகையில்,
மதுரை உள்ள திருமலை நாயக்கர் மஹால் 8 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்க இருக்கிறோம்,1.7 கோடி ரூபாய் மதிப்பில் திருமலைநாயக்கர் மகாலில் ஒளி ஒலி காட்சிக்கு ஏற்ற வகையில் புதிய விளக்குகள் அமைக்க இருக்கிறோம்,அதற்கான ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகிறது,அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, தேர்தல் காலம் என்பதால் தாமதமானது விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி கொரோனாவால் தாமதமானது,தமிழகத்தில் பழமையான இடங்களை பராமரிப்பது குறித்து தொல்லியல் ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது விரைவில் அதற்கான அறிவிப்பு வர வாய்ப்பள்ளது
,மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்த ராய மண்டபம் புனரமைக்க தற்போதுதான் கற்கள் வந்துள்ளன,ஸ்பதி குழுவிற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.புனரமைப்பு பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆகும்,.அதற்குப் பிறகுதான் கும்பாபிஷேகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்
என்றார்.
:












