நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காஷ்மீர் மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு , உட்கட்டமைப்பு வசதியில்லை. அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் 433 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாக ஏன் பிரிக்கவில்லை. மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கூறும் போது ஏன் முத்தலாக் சட்டத்தை ஏன் நிறைவேற்றினார்கள்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் கிருஷ்ணர், அர்ஜூனன் போன்றவர்கள் என்ற நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது அவருடைய சொந்த கருத்து. கர்நாடக மாநிலத்தில் அணு க்கழிவு மையம் அமைக்க மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அங்கு அணுக்கழிவு மைய திட்டத்தை கை விட்டு விட்டார்கள். தற்போது கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்காக முயற்சி நடந்து வருகிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இந்த அரசு திறக்கும். அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம் இவ்வாறு சீமான் கூறினார்.