நெல்லை தச்சை மண்டலம் 8 – 10 வார்டுகளுக்கு இரு நாட்கள் குடிநீர் ரத்து

0
298

நெல்லை மாநகராட்சி சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில்பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பராமரிப்பு பணி நடைபெறுவதால் தச்சநல்லூர் மண்டலம், வார்டு 8, 9 மற்றும் 10-ல் உள்ள பகுதிகளுக்கு 27.05.2021 மற்றும் 28.05.2021 ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பைபாஸ் சாலை அருகில் இரயில்வே இருப்பு பாதை அருகில் (சுப்பிரமணிய நகர் மேல்புறம்) பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பம்பிங் செய்யப்படும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் வால்வுகளை சரிசெய்யும் பணி 27.05.2021 மற்றும் 28.05.2021 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here