கையில் கிடைத்ததை எடுத்து தாக்கிக்கொள்ளும் பழைய ஒழுங்கற்ற யுத்த முறையை புதுவையில் முதல்வரும் துணை நிலை ஆளுநரும் பின்பற்றுகின்றனர்.
கிரண்பேடி வந்ததிலிருந்து அரசின் செயல்பாட்டில் குற்றம் கண்டுபிடிக்கும் வேலையில் மெனக்கெடுகிறார். புதுவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற முதல்வர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டதாக தனது டுவிட்டரில் அவர் சொடுக்கினார். அதில், வெட்கக்கேடான முறையில் விதியை நாராயணசாமி மீறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து பயணிக்கும் படத்தை பதிவிட்டுள்ளார் நாராயணசாமி.
முதல்வர். கவர்னர் விதிமுறை மீறலுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் புதிய கட்டணத்தை வசூலிப்பதா, பழைய கட்டணத்தை வசூலிப்பதா என்பதே போலீசாரின் கவலை.












