சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் பெனிக்ஸ் போலீசால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு முன்னர் போலீஸ் தாக்குதலில் இறந்தவர் பேய்குளம் கட்டட தொழிலாளி வாலிபர் மகேந்திரன்.
சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, சிறிது நாளில் உயிரிழந்தார். ஜெயராஜ்,பெனிக்ஸ் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையின்போது இந்த விவகாரம் எழுந்தது.

அச்சம்பவம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் விசாரணை நடந்த நிலையில், திடீரென விசாரணையை தொடர்ந்து நடத்த மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி முரளி மகேந்திரன் இன்று தூத்துக்குடி வந்தார் .

உயிரிழந்த மகேந்திரன் சகோதரி சந்தனமாரி மற்றும் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்ட மற்றொருவரான யாக்கோபு ராஜ் ஆகியோரிடம் தூத்துக்குடி சிபிசிஐடி பிரிவு அலுவலகத்தில் நேரில் விசாரணை நடந்தது.







