தூத்துக்குடி அய்யனடைப்பை சேர்ந்த பச்சைக் கண்ணன் மகன் சிவகுமார் (41). நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் வசித்து அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005ல் கோரம்பள்ளம் ஆத்திப்பழம் என்பவர் கொலை வழக்கில் சிவகுமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில் ஆஜராவதற்காக சிவகுமார் தூத்துக்குடிக்கு வந்தார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்துக்கு பின்புறம் நீதிமன்றத்திற்கு செல்லும் கேட் வழியாக செல்வதற்காக ரோட்டை கடந்து சென்ற போது, ஒரு மர்ம கும்பல் சிவகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொறியியல் கல்லூரி மாணவர் உட்பட 13பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 5 ல் நீதிபதி முன்பு கோரம்பள்ளம் ராஜேஷ் (29), அண்ணாநகர் சங்கரமூர்த்தி (26) , கேவிகே நகர் பாலசுப்பிரமணியம் (25), யாதவர் தெரு செல்வகுமார் (24) ஆகிய 4 பேர் சரண் அடைய 4 பேரையும் வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி நிஷாந்தினி உத்தரவு பிறப்பித்தார்










தென்நாடுஇணையதளம் தொடர்ந்து பல்வேறு உண்மைகளைத் கொண்டுவர வேண்டும்.
வாழ்த்துகள்.
நிச்சயம், விரைவில் வீறுகொள்ளும்.