ஆளுநர் உரை ஏமாற்றமளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நீட் தேர்வை ஆட்சிக்கு வந்த உடன் ரத்து செய்வோம் என்றவர்கள், அதுபற்றி இப்போது உறுதியாக தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சாக இருக்கிறது.
திமுக ஆட்சி அமைத்து 40 நாட்களுக்கு மேலாகியும் விவசாய கூட்டுறவு வங்கியில் ரத்து செய்யப்பட்ட கடனுக்கு இன்னும் சான்று வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்கவேண்டிய இந்த காலகட்டத்தில் அதற்கும் நடவடிக்கை இல்லை. மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். அதையும் ஆளுநர் உரையில் குறிப்பிடவில்லை. குடும்பத்தலைவிகளுக்கு வழங்குவதாக அறிவித்த உதவித்தொகை குறித்து அறிவிப்பு இல்லை.
அதுமட்டுமல்ல, கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது’ என்றார்.















