நெல்லை மாவட்டம், திசையன்விளையில், சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
அதில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் அங்கு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் வாட்ஸ்ஆப் சாட் மூலம் ஆபாசமாக தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்யவே, தலைமையாசிரியர் சுதாரித்துக் கொண்டு மாணவியின் பெற்றோரை அணுகி ரூபாய் 3 லட்சம் கொடுத்து அவர்கள் வாயை மூடுவதற்கு முயற்சித்துள்ளார்.
ஆனாலும் திருச்சபை நிர்வாகத்தினர் அவரை அழைத்து விசாரித்து எச்சரித்துள்ளனர்.
தலைமையாசிரியர் இதேபோல் பல மாணவிகளிடம் ஆபாசமாக பேசி இருப்பதால் காவல்துறை நடவடிக்கை மூலமே அவரை திருத்த வேண்டும் என்று மற்ற மாணவிகளின் பெற்றோர்கள் கருதினர்.இதை நமது தென்னாடு இணைய இதழில் வெளியிட்டோம.
இது அதிகாரிகள், பொதுமக்களிடையே பெருமளவில் பரவியதையடுத்து பரப்பாடி அருகில் உள்ள ஏமன்குளத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமாரை, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில், திருநெல்வேலி திருமண்டலம் மேல்நிலைப் பள்ளி நிர்வாக மேலாளர் புஷ்பராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.