மலைப்பகுதி மண்சரிவில் சிக்கி ஆடு மேய்த்தவர் பலி

0
1233

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (50). இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்ச்சல் தொழில் செய்து வந்தார்.

கடந்த இரண்டு தினங்களாக மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், மலைப் பாதைகளில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல முருகன் தனது ஆடுகளை, மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார்.

மாலை நேரத்தில் அந்தப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
வனப்பகுதியில் உள்ள வண்ணாம்பாறை என்ற இடத்தில் முருகன் ஒதுங்கி உள்ளார்.
மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு, பாறையின் கீழ் இருந்த முருகன் மண்சரிவில் சிக்கினார். ஆடு மேய்க்கச் சென்ற முருகன் வீடு திரும்பாததால், அருகிலிருந்தவர்கள் அவரை தேடிச் சென்றனர். வண்ணாம்பாறை அருகே பாறை ஒன்று உருண்டு விழுந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்தவர்கள் இது குறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சரிந்து கிடந்த பாறை பெரிய அளவில் இருந்ததால் கல் உடைக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சுமார் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின்பு, இன்று அதிகாலையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி முருகனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

முருகனின் உடலை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here