பல கோடி மோசடி கும்பலுக்கு காவல்துறை உடந்தையா?

0
579

மோசடி கும்பல் ஒன்று பல மாவட்டங்களில் போலியாக நிறுவனம் நடத்தி பொது மக்களிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை மோசடி செய்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் மீது திருச்சி மாவட்ட போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, மதுரையில் ரேணுகாதேவி அளித்த புகாரின் பேரில் 2021 வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ,மதுரை குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நாகமலைபுதுக்கோட்டை ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதந்திரதேவி குற்றவாளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக தகவல் கொடுத்து அவர்களை தப்ப வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தனபால் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here