மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து ,சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பயணிகளின் சூட்கேஸ் கேட்பாராற்று இருந்ததை எடுத்த சோதனை செய்தபோது 1 கிலோ எடையுள்ள 5 தங்க கட்டிகள் இருந்தது .
இதன் மதிப்பு 2 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை கைப்பற்றி யாருடையது என்று விமானத்தில் வந்த பயணிகளிடம் விசாரணை செய்தபோது,
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை, உள்பட இருவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .