முல்லைப் பேரியாற்று நீர் 527 இடங்களில் திருட்டு: அமைச்சர் ஒப்புதல்

0
1096

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தான் ஜெயலலிதாவிடம் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீர் சட்டவிரோதமாக திருடப்பட்டு வருவதாக கடிதம் எழுதினேன்,
தண்ணீர் திருட்டு தொழிலாக நடைபெற்று வருவதை ஆதாரத்துடன் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்ததை தொடர்ந்து தண்ணீர் திருட்டு தடுக்கப்பட்டது,

ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் மீண்டும் தண்ணீர் திருட்டு நடைபெற்று வந்தது.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீர் 527 இடங்களில் ஆயக்கட்டு அமைப்பிற்கு விரோதமாக தண்ணீர் திருடப்பட்டு வருகிறது

தண்ணீர் திருட்டிற்காக ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாரம் திருட்டு நடைபெறுகிறது, பல அதிகாரிகள் கைகோர்த்து இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தண்ணீர் திருட்டு குறித்து வெளிப்படை தன்மையுடன் முழுமையான விசாரணை நடத்தப்படும்.

மின்சார துறை, நீர் மேலாண்மை துறை, வேளாண் துறை அமைச்சர்களிடம் தண்ணீர் திருட்டு குறித்து எடுத்துச்சென்று தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

தண்ணீர் திருட்டில் ஈடுபடுவபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here