டாஸ்மாக் கடை முன் சூடம் ஏற்றி மது புட்டியை வணங்கி குடிமகன் கொண்டாட்டம்

0
505

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் 27 மாவட்டங்களில் நாளை முதல் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்த நிலையில், காலை முதலே மதுபானங்களை வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மதுபானக்கடை திறக்கப்பட்டதும், முதல் நபராக வந்த குடிமகன் ஒருவர் மதுபான பாட்டிலை வாங்கிய மகிழ்ச்சியிலும், கடை திறக்கப்பட்டதை கொண்டாடும் வகையிலும் கடைக்கு முன்பாக சூடம் ஏற்றி, பூ தூவி, மதுவை தரையில் வைத்து வணங்கியது பார்ப்போரை விழுந்து விழுந்து சிரிக்கச்செய்தது.

கீழே வேலூர் காட்பாடி மதுக்கடை முன்பு குடிமகன் ஒருவர் சூடம் ஏற்றி தேங்காய் உடைக்கும் வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here