வெளிநாட்டிலிருந்து கரோனா வைரஸ் நெருக்கடியால் தமிழகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் அழைத்து வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபுபக்கர் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் செய்ய சுலைமான், செயலாளர் இக்பால், நகர தலைவர் செய்யது மசூது, செயலாளர் லத்தீப், ஜமாஅத் உலமா சபை குறிப்பிட்டார்கள்,அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் 11 பேர் மீது கடையநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.









