தூத்துக்குடியில் நாளை (22ஆம் தேதி) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யப்போவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
👇
அன்று காலை 8 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகா் பேரூந்து நிறுத்தம் எதிரில் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். திருச்செந்தூா் வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் வேட்பாளர் ஜிவி மார்க்கண்டேயன், ஒட்டப்பிடாரம் வேட்பாளர் சண்முகையா ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும்,
திருவைகுண்டம் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜுக்கு கை சின்னத்திலும், கோவில்பட்டி வேட்பாளர் சீனிவாசனுக்கு அரிவாள், சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்கு கேட்கிறார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.









