தென்காசி திமுக உட்கட்சி மோதல்

0
824


தென்காசி மாவட்ட திமுகவில் கொரானா நிவாரணம் வழங்குவதில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள் வழங்கிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்திலும் திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இன்று திமுக சார்பில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் மலையான் தெரு பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக திமுக மாநில வர்த்தக அணி துனை அமைப்பாளர் அய்யாதுரை பாண்டியன் வந்தார்.
அதற்கு திமுக நகர செயலாளர் சாதிர் தலைமையில் ஒரு பிரிவிணர் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் மறித்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் 100 நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here