தூத்துக்குடி டூவிபுரம் 6ஆவது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (51) திமுக பிரமுகர். அவரது மனைவி தனசெல்வி (50). இவர்கள் இருவர் பெயரிலும் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 3 லாரிகளுக்கு கடன் வாங்கியுள்ளனர்.
சரியாக தவணையை செலுத்தாமல் 1 கோடிக்கு மேல் கடன் தொகை உயர்ந்ததும் நிதி நிறுவன மேலாளர் சங்கரும் ஊழியரும் கடன் கேட்க சென்றுள்ளனர். அவர்களை மகேந்திரனும் அவரது மனைவியும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்தனர்.
ஆனாலும், போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பெற்றனர். தற்போது தூத்துக்குடி மத்திய பாக காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மகேந்திரன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.









