சீர்மிகு நகரத் திட்டத்தில் ( ஸ்மார்ட் சிட்டி) ரூ 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாளையங்கோட்டை வ உ சி மைதான கேலரி யின் மேற்கூரை நேற்று பிற்பகல் காற்றுடன் பெய்த மழைக்கு சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
கட்டித் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே கட்டுக் குலைந்த கட்டடத்தை நெல்லை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநயினார் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு சென்றனர்.
சென்னை நகராட்சி நிர்வாகத் தலைமை பொறியாளர் பாண்டுரங்கன் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கேலரி கட்டுமான உறுதி தன்மையை ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ.கிருஷ்ணமூர்த்தியும் சென்னை நகராட்சி நிர்வாகம் அலுவலர்களுடன் வந்தார். அவர், ‘, இந்த ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.