தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த 29வயது முருகராஜ் கூலி வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தின் உட்பகுதி சுவரில் உட்கார்ந்து மது அருந்துவது வழக்கம் .
வழக்கம்போல் நேற்று தெப்பக்குளத்தின் உட்பகுதியில் உட்கார்ந்து மது அருந்திய முருகராஜ் நிலைதடுமாறி குளத்தில் விழுந்துள்ளார் . குளத்தில் தண்ணீர் இருந்த நிலையில் மூழ்கி உள்ளார். இன்று காலை அவரின் உடல் அழுகிய நிலையில் தெப்பத்தில் மிதந்துள்ளது .
காவல்துறையினர் முருகராஜின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.









