நெல்லை வீரவநல்லூர் மதுக்கடையில் நேற்று பாத்திர வியாபாரி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சாம்சங் பயிற்சிக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ராஜாராம் சென்றுள்ளார்.
அப்போது பொறுப்பு அதிகாரியான அவர் மதுபோதையில் இருந்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்தஅவரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், இன்ஸ்பெக்டர் ராஜா ராமை பாளையாங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். அவர் மதுபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாளையங்கோட்டை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.








