தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்டர் (21), நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு வந்த நிலையில், வெட்டி கொலை. செய்யப்பட்டார்.
அத்தை முறையுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். திருமணம் கேட்டுச்சென்ற சிறுமியிடம் தவறாக நடந்ததாக ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் அவர் சிறைக்கு சென்று திரும்பி உள்ளார்.
இந்நிலையில் அத்தை வீட்டுக்கு வந்து பெண் கேட்டது அத்தை மகனுக்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.