ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பிரபாத் தாரா மைதானத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது ‘ ஏழை மக்களின் பணத்தை சூறையாடியவர்களை சரியான இடத்திற்கு அனுப்புவதே எனது அரசாங்கத்தின் உறுதிப்பாடு. சிலர் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர். கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்து உள்ளது. அதே நேரத்தில் முழு படமும் இனிமேல் தான் காட்டப்பட உள்ளது.
தாங்கள் நாட்டிற்கு மேலானவர்கள் என்று நினைத்தவர்கள் தற்போது நீதிமன்றங்களைச் சுற்றிவருகிறார்கள் இன்று நாடு ஒருபோதும் காணாத வேகத்துடன் முன்னேறி வருகிறது என கூறினார்.