ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

0
1370

புளியங்குடி போலீசார் நேற்று டி.என்.புதுக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்டோ ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் இருந்த டி.என்.புதுக்குடி கற்பக வீதி தெருவை சேர்ந்த காசிராஜன், தாமரைச்செல்வன், சுரேஷ், மற்றும் ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் சுமார் 2 டன் அளவிலான ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முத்துசுப்பிரமணியம் மற்றும் உதவி ஆய்வாளர் ஷேக் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here