மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அங்கு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது:-
டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கோயில்கள் திறக்கப்படாத ஏன்என்ற கேள்விக்கு, ‘தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுக்குள் வந்த பிறகு திருக்கோயில்கள் திறக்கப்படும்’ என கூறினார்.
கோயில்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் இந்தாண்டு கொரோனா தொற்றின்போது நடைபெறாதது குறித்த கேள்விக்கு, ‘பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை தமிழக அரசு ரத்து செய்யவில்லை ” என்றார்.