தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சிறு நகரம் ஆகும். இந்த ஊரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூரில் இருந்து தினம் தோறும் செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இந்த ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.








