கால் மாற்றி அறுவை சிகிச்சை : பாளை.ஹை கிரவுண்டில் பரபரப்பு

0
722

திருநெல்வேலி அருகே உள்ள சுத்த மல்லிகை சேர்ந்த சேக் அப்துல் மகன் ரஹீம் (14 ). இரு நாட்களுக்கு முன்பு சுத்தமல்லி விலக்கு அருகே பைக் விபத்தில் அடிபட்டு இடது கால் மூட்டு உடைந்து பாளையங்கோட்டை ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாளை அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியதன் பொருட்டு அறுவை அரங்கத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தவறுதலாக வலது மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ரஹீமின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here