முக்கூடலில் போதை வியாபாரிக்கு போலீஸ் துணை போவதாக பொதுமக்கள் பொறுமுகின்றனர்.
முக்கூடலில் கீழ பெரிய வீதியில், கடந்த சில வருடங்களாக புரோட்டா கடை நடத்தி வரும் சேகர் என்பவர், சட்ட விரோதமாக போதை பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்நிலையில் இவர் கடை நடத்தும் இடம் முக்கூடலில் குறிப்பிட்ட சமுதாயத்தின் கோயில் மண்டக படிதாரருக்கு சொந்தமான இடம் என்பதால், கடையை காலி செய்யுமாறு அவர்கள் சேகரிடம் வற்புறுத்தினர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஒப்பந்த காலம் முடிந்ததும் வெளியேறுவதாக சேகர் ஒப்புக்கொண்டார். ஆனால் அதன் பின்பும் கடையை காலி செய்யவில்லை. மீண்டும் வெளியேறுமாறு கூறிய மண்டக படிதாரர் மீது தனது மனைவியிடம் ஆபாசமாக பேசியதாக புகார் அளித்தார். முக்கூடல் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரும் எவ்வித விசாரணையும் இன்றி உடனடியாக மண்டகப்படிதாரர் மீது வழக்கு பதிவு செய்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சரக காவல் அதிகாரியிடம் மனு கொடுத்த பின்பும் மேலும் ஒரு மண்டக படிதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முக்கூடல் காவல்துறை மீது மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். பொய் வழக்கை போலீசார் ரத்து செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தவிருப்பதாக கூறினர்.















