நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் திடீர் மரணம்

0
6

மேலப்பாளையத்தில் உள்ள வசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் சத்தியநாராயணன் (28). இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சோர்வாக உள்ளது என்று கூறியுள்ளார். உடனே நண்பர்கள் பருத்திப் பால் குடித்தால் சரியாகிவிடும் என்று வாங்கிக் கொடுத்தனர். அதைக் குடிப்பதற்குள் சத்தியநாராயணன் மயங்கி விழுந்தார்.

 உடனடியாக அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே மரணம் அடைந்தார்.

 இது குறித்து மேலப்பாளையம் போலிஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here