சாத்தான்குளம் அருகே கைகால் கட்டப்பட்ட நிலையில் தொழிலாளி மர்ம மரணம்

0
458

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நரையன்குடியிருப்பு கிராமத்தில் ஜெயக்குமார் என்பவரின் மனைவி கலா மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார். ஜெயக்குமார் திருமணத்திற்குப் பின்னர் மனைவியை விட்டு பிரிந்து சென்னையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். கணவரை பிரிந்த கலா அவரது இரண்டு மகள்களையும் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஜெயக்குமார் தனது குடும்பத்தினரை எப்போதாவது பார்க்க வருவது வழக்கம் எனக் கூறப்படுகின்றது.

அதேபோல் நேற்றைய தினம் தனது வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் குடிபோதையில் தனது குடும்பத்தினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயக்குமாரை எச்சரித்து ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் தனது குடும்பத்தினர் இடையே மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது மனைவி மற்றும் மகள்கள் ஜெயக்குமாரை கை கால்களை கட்டிவிட்டு இரவு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளனர்.

பின்னர் காலையில் அவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here