தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆவின் பால் நல்ல வரவேற்பு பெற்று அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.. இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டின் ஒரு அங்கமான பதப்படுத்தப்பட்ட பசும்பால், 250 மில்லி லிட்டர் மற்றும் 500 மில்லி லிட்டர் அளவுகளில் இந்த பகுதி முழுவதும் விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று விற்பனைக்கு வந்த 250 மில்லி லிட்டர் பால் பாக்கெட்டில், ஒருபுறம் 2050 மில்லி லிட்டர் என்றும், மறுபுறம் 500 மில்லி லிட்டர் என்றும் இருவேறு அளவுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது..
இதனால் பால் பாக்கெட் வாங்கிய பொதுமக்கள் குழம்பி வருகின்றனர்.