தூத்துக்குடி புதுக்கோட்டை மறவன் மடத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளிக்கு செல்ல முன்பகுதியில் சாலை வசதி இல்லை. இருக்கும் ஒரே பாதையையும் பயன்படுத்த பள்ளி நிர்வாகம் தடை செய்து விட்டது. பின்னால் உள்ள தனியார் நிலம் வழியாக பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது என்று, மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை பள்ளி முன்பு திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதை எடுத்து புதுக்கோட்டை போலீசார் அவ்விடத்திற்கு வந்து பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தியதை எடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
பள்ளியின் புதிய முதல்வரின் பிடிவாதத்தாலேயே இந்த பிரச்சனை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.