சென்னை வேலப்பன்சாவடியை சேர்ந்தவர் அர்ஜுனன் இவர் கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இன்று திருவேற்காட்டில் இருந்து சூளைமேடு செல்வதற்காக ஊபர் மூலம் காரை புக் செய்திருக்கிறார். சுனில் குமார் என்பவர் அந்த காரை திருவேற்காட்டில் இருந்து அர்ஜுனை ஏற்றிக் கொண்டு கோயம்பேடு மேம்பாலம் அருகே வரும்போது திடீரென கார் தீப்பற்றி இருக்கிறது.
கார் திடீரென தீ பற்றியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதனை பார்த்து கோயம்பேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கோயம்பேடு தீயணைப்புத்துறை வருவதற்கு உள்ளாக கார் முற்றிலுமாக தீப்பற்றி எரிந்து உள்ளது மேலும் அதில் பயணம் செய்த அர்ஜுனன் காரிலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கி தீயில் கருகி பலியாகி இருக்கிறார் காரை ஓட்டி வந்த சுனில்குமார் படுகாயத்துடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆகியோர் மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த காரை முற்றிலுமாக அணைத்து கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்
மேலும் போலீசாரின் விசாரணையில்
அர்ஜுனன் கார்பன்டர் தொழிலில் பயன்படுத்தப்படும் வார்னிஷ்ஷை காரில் ஏற்றி வைத்திருந்ததாகவும், காரில் பற்றிய தீ வார்னிஷில் பற்றியதால் மளமளவென தீப்பிடித்து எரிந்ததாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது இதனை தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்