கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கழிவுநீர் வடிகால்.கதிர்வேல் நகர் வழியாக இணைத்து பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்வாயில் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கதிர்வேல் நகர் மற்றும் பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதிக்கும் ஊர் பொதுமக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் தொடங்கி கைகலப்பாக மாறியது. பாண்டவர்மங்கலம் கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து யாரும் வீட்டுக்கு செல்ல மாட்டோம். என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.








