தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கால சந்தி பூஜை, உச்சி கால பூஜை, சாய்ரட்சை ஆகியவை நடந்தது. தொடர்ந்து இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.









