தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி சோமசுந்தரி தனது வீட்டிற்கு பட்டா வேண்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த மனு குறித்து எந்தவித தகவலும் இல்லை.
கடந்த 1-ஆம் தேதி திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையிலான அதிகாரிகள் அந்த மனு மீதான விசாரணைக்கு அவரது வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். அதன் பின்னரும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.
கடந்த 5 மாத காலமாக பட்டா வழங்காமல் இழுத்தடைப்பதால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர் வேறு வழியின்றி வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு தபால் மற்றும் நேரிலும் தெரிவித்துள்ளார்.









