கலுங்குவிளையில் திறப்பு விழா காணாமலே இடிந்து விழும் கழிப்பறை

0
653

சாத்தான்குளம் ஒன்றியம் கலுங்குவிளையில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வரை திறந்து வைக்கப்படவே இல்லை.

ஆனால் அதற்குள் கட்டிடம் ஆங்காங்கே இடிந்து விழுகிறது. கழிவறை கோப்பைகள் கூட சரியாக பதிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த கழிப்பறைக்கு மின்சார வசதியும் செய்து தரவில்லை. தண்ணீர் வசதியும் இல்லை.

.ஆனால் இந்த கழிப்பிடம் கட்டுவதற்கான முழு தொகையையும் ஒப்பந்தக்காரர் எடுத்து விட்டதால், செப்பனிட்டு சீரமைத்து திறப்பதற்கு வழி இல்லாமல் கிடக்கிறது.

எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் இதில் தலையிட்டு, அதே ஒப்பந்தக்காரர் மூலம் பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன், தண்ணீர், மின் வசதி செய்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here