உரிய நிறுத்தத்தில் நிறுத்தாமல் தகராறு செய்த நடத்துனர் – வள்ளியூர் அருகே நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட பயணி

0
1092

உரிய நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் தகராறு செய்யும் நடத்துனர் களால் பயணிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இன்று காலை 06.35 மணிக்கு, வள்ளியூர் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு வள்ளியூர் செல்வதற்காக நாகர்கோவில் நோக்கி சென்ற தடம் எண் 505, வண்டி எண் TN 74 N2040 என்ற பேருந்தில் நடத்துனரிடம் பயணி ஒருவர் பத்து ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு கேட்டார்.

அதற்கு நடத்துனர் தெற்கு வள்ளியூரில் நிற்காது.அதற்கு அடுத்த நிறுத்தத்தில் நிற்கும் அங்கு இறங்கி செல் என கூறினார் . தடம் எண் 505 என்ற பேருந்திற்கு தெற்கு வள்ளியூர், பாம்பன்குளம்,கலந்தபனை அடுத்தடுத்து இருக்கும் 3 ஊர்களுக்கும் நிறுத்தம் உண்டு என்று பயணி ஆதாரத்தோடு கூறியும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த வில்லை.

மிகவும் கெஞ்சிக் கேட்ட பின்பு தொலைதூரத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டா வெறுப்பாக இறக்கிவிட்டு சென்றுள்ளனர் .

போக்குவரத்து கழக நிர்வாகம் அனுமதி கொடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் தொடரந்து அரசுக்கு வருவாய் இழப்பையும் மக்களுக்கு கஷ்டத்தையும் ஏற்படுத்தி வரும் இந்த மாதிரியான ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்று அந்த பயணி கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here