சாத்தான்குளம் அருகே இயற்கையை பாதுகாக்க ‘மலை பொங்கல்’

0
1431

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் குளத்துக்குள் பெரிய வெள்ளை பாறை ஒன்று உள்ளது. இதன் அருகில் கருப்பு பாறை ஒன்று ‘மினி மலை’ போல இருந்தது. குவாரி பணிக்காக அது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளை பாறையையும் உடைத்து விடக்கூடாது என்பதில் வட்டார மக்கள் மிகக் கவனமாக இருந்தனர். இதன்பொருட்டும், இயற்கையை பாதுகாக்கவும், மழை பெய்யவும் வேண்டி, அப்பாறை மீது ,’ மலைப் பொங்கல்’ கொண்டாடப்பட்டது.

இப் பொங்கல் விழாவிற்கு கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் இதழாளர் அய்கோ தலைமை வகித்தார். துணைத் தலைவர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார்.

சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, நெடுங்குளம் பங்குத்தந்தை சேவியர் கிங்ஸ்டன் ஆகியோர் பொங்கலுக்கு தீ மூட்டி விழாவை தொடங்கி வைத்தனர். வங்கி செயலர் அகமது வரவேற்றார்.

இதில், பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டி, முன்னாள் தொடக்க கல்வி அலுவலர் சாமுவேல், ஆசிரியர்கள் மணிமாறன், நெல்சன் ஆகியோர் பேசினர்.

வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் ஹைகோர்ட் துரை, அந்தோணி சவரிமுத்து, அந்திரேயா, முருகேசன், ஸ்தனிஸ்லாஸ், நெடுங்குளம் ஊராட்சி செயலர் ராஜா, கூட்டமைப்பு தலைவி ஜெபராணி, மகளிர் குழு பிரதிநிதிகள் விஜயா, ஜெயசீலி, அந்தோணி செல்வமேரி, ஜெயா, கன்னியம்மாள், புஷ்பவல்லி மற்றும் கோயில் மணி, மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாட்டை வங்கி எழுத்தர் சுப்பிரமணியன், உர விற்பனையாளர் அமுதா, பணியாளர் எப்சலின்,நியாய விலை கடை பணியாளர்கள் பிரின்ஸ் தன சிங், ராஜன், நகை மதிப்பீட்டாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here