‘அக்னி பாத்’ எதிர்ப்பு பேரணி: மார்க்சிஸ்ட் – போலீசார் தள்ளுமுள்ளு

0
444

மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ரயில்வேயை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.


பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை முன்பிருந்து பேரணியாக ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். ரயில்வே நிலையம் வந்தவுடன் போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்குள் ஓடிச் சென்றனர்.


இதனால், போலீசாருக்கும் போராட்டக்
காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில், சில போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்தை முற்றுகை இட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here