காமராஜர் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்

0
412

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 136 தொகுப்பூதிய பணியாளர்களை கடந்த 12ஆம் தேதி முதல் வேலையில் இருந்து நீக்கினர்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக நீக்கியதாக கூறப்பட்டாலும்,எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது. ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து, காமராஜர் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் கடந்த 13ஆம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அதில், கடந்த இரண்டு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் .
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 136 பேரை மீண்டும் வேலையில் அமர்த்தி தங்களின் வாழ்க்கை தரம் உயர வழி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here