மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் கதிர்வேல் (36) ராணுவ வீரர்.
க கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசாமில் பணியில் இருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் கதிர்வேல் மரணமடைந்தார்.
அவரது உடலை மீட்டு விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து பிறகு சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மதுரை தேசிய மாணவர் படை சுபேதார் பிரமோத் சார்பில் தேசிய கொடி பொருத்தப்பட்ட மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அணி சேகர், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் தங்கதுரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை விமான நிலைய இயக்குனர் பாபுராஜ்,விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன், துணை கமாண்டன்ட் சனிக்ஷ் மற்றும் உறவினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கதிர்வேலின் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.