திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளரும் அமமுக பொறுப்பாளருமான ஜோதிமுருகன் கல்வி பயிலும் மாணவிகளிடம் பாலியல் டார்ச்சர் செய்ததாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதி முருகனை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தாளாளரின் பாலியல் சீண்டல் களுக்கு கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது இதையடுத்து அவரைபோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பாலியல் குற்றசாட்டுக்கு ஆளான ஜோதிமுருகனை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் டி டி வி தினகரன் அறிவித்துள்ளார்.














