அறுபடைவீடுகளில் வெற்றி நாதராக முருகன் வீற்றிருக்கும் திருச்செந்தூரில் மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டின் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற விழாவை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஒன்றரை மணிக்கு விசுவரூப தீபாராதனை காட்டப்பட்டது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 3 மணிக்கு கொடி பட்டம் வீதியுலா சென்றது.
5:20 மணிக்கு பஞ்ச வாத்தியம் முழங்க இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.கொடிமரத்துக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
புகழ்பெற்ற திருச்செந்தூர் மாசித் திருவிழா இம்மாதம் 18ஆம் தேதி வரை நடக்கிறது. 16ஆம் தேதி சிறப்பு மிக்க தேரோட்டம் நடக்கிறது.