சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கிய மேலும் இருவர் பலி

0
317

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மஞ்சள் ஓடைபட்டி பகுதியில், விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பூமாரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் சிக்கி ஆலை உரிமையாளர் கருப்பசாமி, அவரது உறவினர் செந்தில்குமார், தொழிலாளி காசி ஆகியார் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அய்யம்மாள் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த தீக்காயம் மற்றும் தலையில் காயமடைந்த தொழிலாளி முனியசாமி என்பவர், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனலிக்காமல், முனியசாமி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய போலீசார், வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ஆலை உரிமதாரர் உட்பட 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here