தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கலைஞானத்துக்கு, பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடந்தது இதில் ரஜினி பங்கேற்றார்
1980 -90களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகத்திறமைகள் உண்டு.
இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தவர். எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இது நம்ம ஆளு’ படத்தில் பாக்யராஜ், இவரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
கதாசிரியர் கலைஞானத்தின் 75 ஆண்டுகால கலைத்துறையின் சேவையை போற்றி, சென்னை கலைவாணர் அரங்கத்தில், வைர விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் பாரதிராஜா, தலைமை தாங்கினார்.
தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வைரவிழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மேடையில் பேசும்போது பைரவி படத்தின் மூலம் எம்மை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்த கலைஞானத்துடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற முடியாமல் போனது குறித்து வருத்தம் அளிக்கிறது கதாசிரியர் கலைஞானத்திற்கு எமது சொந்த பணத்தில் வீடு வாங்கி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.